பாலகிருஷ்ணா நடித்துள்ள தெலுங்கு படமான "அகண்டா 2” மூலம் ' “இளைஞர்களிடம் சனாதன தர்மம் போய் சேரணும்" என்றார்.
பாலகிருஷ்ணா நடித்துள்ள போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் தெலுங்கு படமான "அகண்டா 2' தமிழ் உள்ளிட்ட பிறமொழிகளிலும் வெளியானது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பாலகிருஷ்ணா, ''நான் பிறந்தது சென்னை, இதுவே எனக்கு ஜென்ம பூமி. ஆந்திரா ஆத்ம பூமி, தெலுங்கானா கர்மபூமி. எனக்கும் தமிழக மக்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இப்படம் இந்து தர்மத்தை பற்றி உலகத்திற்கும், சனாதன தர்மத்தின் உயர்வையும் வலியுறுத்தும். வரும் தலைமுறையினருக்கும் சனாதன தர்மம் தெரிய வேண்டும்" என்றார்.
0
Leave a Reply