25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


தமிழ்நாடு அரசு குறு குழுமம் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிட்கோவின், நெசவுக்குழுமம் (பெண்கள்) 16.02.2026,   தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் காணொலி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு அரசு குறு குழுமம் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிட்கோவின், நெசவுக்குழுமம் (பெண்கள்) 16.02.2026, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் காணொலி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு குறு குழுமம் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிட்கோவின் மூலம் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தாலுகா, கணபதிசுந்தரநாச்சியார்புரம் கிராமத்தில் 377.16 லட்சங்களில் அரசாணை எண்.34. MSME (D1) துறை, நாள் 26.05.2022 மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மானியமாக திட்ட மதிப்பீட்டில் 90 சதவீதம் ரூபாய் 339.37 லட்சங்கள் மானியத்துடன் நெசவுக்குழுமம் (பெண்கள்) தொடங்கிட கடந்த 14.09.2022 அன்று தமிழ்நாடு சிட்கோவின் மூலம் அனுமதி வழங்கப்பட்டது.

இதன் நீட்சியாக குழுமத்தின் கட்டிடப் பணிகள் முடிவுற்று அவற்றின் இயந்திர தளவாடங்களை நிறுவி குழுமம் தனது உற்பத்தியினை தொடங்கிட வருகின்ற 16.02.2026, திங்கட்கிழமை அன்று  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கரங்களால் சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணியளவில் காணொலி வாயிலாக திறந்து வைக்கப்பட உள்ளது என சிட்கோ கிளை மேலாளர் திரு.ஆ.பிரான்சிஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *