“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்(02.07.2025) “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அதனைதொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 349 முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சிவகாசி மாநகராட்சியில் 32 முகாம்களும், 5 நகராட்சிகளில் 70 முகாம்களும், கிராம ஊராட்சி பகுதிகளில் 229 முகாம்களும் ஆக மொத்தம் 349 முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்படி, முகாம் வருகிற 15.07.2025 முதல் 07.11.2025 வரை நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் நகரப்பகுதிக்கு 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், கிராமப்பகுதியில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்விபரங்கள் குறித்தும் முகாம் ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் தொடர்புடைய அலுவலர்ககளுடன் கலந்தாலோசித்து, தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) திரு.காளிமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திருமதி பிரதௌஸ் பாத்திமா, மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply