மொறு மொறு காளான் பக்கோடா.
தேவையான பொருட்கள்:
காளான் - 200 கி,
கடலை மாவு - 1 கப்,
அரிசி மாவு - 1/4 கப்,
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது),
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது),
இஞ்சி - சிறிது,
மிளகாய் தூள் - 2 ஸ்பூன் (விருப்பப்பட்டால்),
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு ,
செய்முறை:
காளானை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் நறுக்கிய காளான், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பிற மசாலாப் பொருட்களை சேர்க்கவும்.
அதனுடன் கடலை மாவு மற்றும் அரிசி மாவைச் சேர்க்கவும்.
சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து, கெட்டியான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவு மிகவும் நீர்த்துப் போகாமல் பார்த்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
சூடான எண்ணெயில் பிசைந்த காளான் கலவையை உதிர்த்துப் போடவும்.
பக்கோடா பொன்னிறமாகவும், மொறுமொறுப்பாகவும் மாறும் வரை பொரித்தெடுக்கவும்.
சுவையான காளான் பக்கோடாவை சூடாகப் பரிமாறவும்.
0
Leave a Reply