25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


கோவில் புளியோதரை வீட்டில் செய்யும் முறை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோவில் புளியோதரை வீட்டில் செய்யும் முறை.

தேவையான பொருட்கள் - 

கடலைப்பருப்பு 1/4 கப்,

உளுத்தம் பருப்பு. 1/4 கப்,

கொத்தமல்லி விதைகள் - 2 தே.கரண்டி,எள்ளு - 2தே.கரண்டி,

மிளகு-1தே.கரண்டி,

வெந்தயம்-1 தே.கரண்டி,

கறிவேப்பிலை சிறிதளவு,

காய்ந்த மிளகாய்-10-15,

புளி - ஒரு எலுமிச்சங்காய் அளவு.

செய்முறை -

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை எண்ணெய் சேர்க்காமல் பொன்நிறமாக வறுத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து கொத்தமல்லி விதை வெந்தயம், மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து இதையும் நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பாத்திரத்தில் கறிவேப்பிலையை நன்றாக சூடாக்கி உலர வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் புளி கரைசலை சேர்த்து நன்றாக சூடு படுத்திக் கொள்ள வேண்டும். பின்பு இதில் சிறிதளவு உப்பு சேர்த்து, நன்றாக ஆறிய பின் அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது கொரகொரப்பாள பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும்.

அதனுடன் கடுகு கடலைப்பருப்பு, கரு வேப்பிலை,பெருங்காயம் தாளித்து சேர்த்தால் சுவையான புளியோதரை பொடி தயார்.அதன் பின்னர் சாதம் வடித்து அதில் தேவையான உப்பு,நல்லெண்ணெய் கலந்து, தேவையான அளவு பொடியையும் போட்டு கலந்தால் கோவில் பாணியில் சுவையான  புளியோதரை தயார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News