கவுனி அரிசி பொங்கல்.
தேவையான பொருட்கள் -
1கப்கருப்பு கவுனி அரிசி, மூன்றரை கப் தண்ணீர்,1கப்வெல்லம்,
1ஸ்பூன் ஏலக்காய் தூள்,8முந்திரிப் பருப்பு,3டேபிள்ஸ்பூன்நெய்,
கால் கப்தேங்காய்த்துருவல்
செய்முறை -
கவுனி அரிசியை சமைப்பதற்கு முன்பாக அதிக நேரம் அதாவது6 மணி முதல்8 மணி வரை ஊற வைக்கவும். பிறகு ஊறிய அரிசியை குக்கரில் ஒன்றுக்கு மூன்று அல்லது மூன்றரை தண்ணீர் விட்டு 6 விசில் விடவும்.
குக்கரை திறந்து அரிசியை ஒரு விரலால் எடுத்து நசுக்கி பார்த்தால் வெந்தது தெரியும். அரிசியை பார்க்கவே வேகாதது போல் தான் இருக்கும். ஆனால் நசுக்கி பார்த்தால் உள்ளே நன்கு வெந்திருக்கும். இதுவே சரியான பக்குவம்.ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை எடுத்து கொண்டு அரைக் கப் தண்ணீர் ஊற்றி வெல்லம் கரையும் அளவுக்கு சூடு பண்ணவும்.
பிறகு இதனை பொங்கல் செய்யும் பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும். ஏனெனில் அடியில் மண், தூசி ஏதேனும் இருக்க வாய்ப்பு உள்ளது.பிறகு இந்த வெல்லக்கரைசலுடன் வேக வைத்த கவுனி அரிசியை சேர்த்து அடுப்பை அதிக தணலில் வைக்கவும்.பிறகு ஒரு கொதி வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து துருவிய தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
பிறகு இதனை நன்கு கிளறி மற்றொரு சிறிய கடாயில் நெய் விட்டு முந்திரிப்பருப்பை மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து பொங்கலில் சேர்க்கவும்.மிகவும் சத்தான சுவையான செட்டிநாட்டு கருப்புகவுனி அரிசி பொங்கல் ரெடி.
0
Leave a Reply