25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


மூளையில் உள்ள நரம்பு செல்களை ஊக்குவித்து ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரைக்கீரை .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மூளையில் உள்ள நரம்பு செல்களை ஊக்குவித்து ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரைக்கீரை .

வல்லாரைக்கீரை ஆற்றங்கைரையிலும் வயல் வரப்பிலும் குளக்கரையிலும் தானாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். நீர்ப்பிடிப்புள்ள இடங்களில் இது கொடியாகப் படர்ந்து கிடக்கும்.இந்தக் கீரையில் வைட்டமின்களும் தாது உப்புகளும் அதிகமாக உள்ளன. இதை உணவாகப் பயன்படுவதைவிட, மருந்தாகப் பயன்படுவதுதான் அதிகம். அடிக்கடி உணவில் சேர்ப்பதால் உடல் எரிச்சல், சிறுநீர் மஞ்சளாக மாறுதல் முதலியவை குணமாகும். மூளையில் உள்ள நரம்பு செல்களை ஊக்குவித்து ஞாபக சக்தியை அதிகரிக்கிறது, ஆனால், இந்தக் கீரையை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் தலைவலி, மயக்கம் முதலியவை வருமாம். அளவோடு சேர்க்கவும்.

வல்லாரைக் கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் அதன் சுவையும் மருத்துவக் குணமும்கெட்டுவிடும். வல்லாரையுடன் வெங்காயம், மிளகு, சீரகம் சேர்த்துச் சாம்பார் செய்து சாப்பிடலாம். உளுந்தை வறுத்துப் பாசிப்பருப்புடன் சேர்த்துக் கூட்டு வைக்கலாம்.வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால்குடல்புண், குடல்நோய்,வாய்ப்புண், வாய் துர்நாற்றம் ஆகியவை அகலும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் இது, கண்நோய்களுக்குச் சிறந்த மருந்து,

வல்லாரைக்கீரைபொதுவாகமூளைவளர்ச்சிக்குஉதவுகிறது.ஞாபகசக்தியைவளர்க்கிறது.நரம்புத்தளர்ச்சியைக்கட்டுப்படுத்துகிறது.இதயபலத்துக்கும்.தாதுவிருத்திக்கும்உதவுகிறது.காமாலை, தொழுநோய், வாதநோய், நீரிழிவு, சளி, சிறுநீர்க்கோளாறு, யானைக்கால் நோய், காய்ச்சல் ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News