பிஸ்தா பருப்பில் உள்ள ஊட்டச்சத்துகள் .
பிஸ்தா பருப்பு மிகுந்த ஊட்டச்சத்து கொண்டது. சுமார்28 கிராம் பருப்பில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், வைட்டமின் பி6 மற்றும் மாங்கனீஸ் அதிக அளவு உள்ளன.
பிஸ்தா பருப்பில் மிக அதிகமாக ஆன்டிஅக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை எல்லாமே மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை தரும். ஆராய்ச்சி முடிவுகள், பிஸ்தா பருப்பு இதயத்திற்கு நன்மை தரும் கொழுப்பை கொண்டிருப்பதால் பல்வேறு இதய வியாதிகளை தடுக்கும் தன்மை கொண்டது. மேலும் இது கெட்ட கொழுப்பை குறைத்து இதய நோய்கள் வருவதை 12% வரை குறைக்கும்.
மன அழுத்தத்தினால் வரும் இரத்தக் கொதிப்பை பிஸ்தா பருப்பு நல்ல வகையில் கட்டுப்படுத்தும். மேலும் இரத்த குழாய்களை விரிவடைய செய்து, நல்ல இரத்த ஓட்டத்தை உண்டாக்கி இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.பிஸ்தா சாப்பிட்டபிறகு உடலில் க்ளுகோஸ் மற்றும் இன்சுலின் அளவு குறைவாக இருப்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளது.
இது பெப்டைட்1 என்னும் ஹார்மோன் அளவை அதிகரித்து உடலின் க்ளுகோஸ் அளவை சீராக வைக்கிறது.பிஸ்தாவில் உள்ள நார்ச்சத்து உணவு செரிமானத்தை சீர் செய்து மலச்சிக்கலை தடுக்கிறது மற்றும் இந்த நார்ச்சத்து குடலில் நல்ல பாக்டீரியா வளர்ச்சிக்கு உதவுகிறது.குடலில் உள்ள பாக்டீரியா இந்த நார்ச்சத்தை நொதிக்கச்செய்து மற்றும் பல நன்மைகளை கொண்ட குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்களை உற்பத்தி செய்கிறது.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்.கூர்மையான மூளை, புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு.உடலில் வீக்கத்தைக் குறைக்கும்.இரத்த சோகையைக் குணப்படுத்தும்.வயிற்று எரிச்சலுக்கு உதவுகிறது.இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கும்.முதுமை வரை கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.வயதானதால் அதிகரித்து வரும் விளைவுகளைத் தடுக்கிறது.
0
Leave a Reply