25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >>


குறைவான கலோரி உள்ள வெள்ளரிக்காய்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குறைவான கலோரி உள்ள வெள்ளரிக்காய்.

காய்கறியிலேயே குறைவான கலோரி சக்தி உள்ளது வெள்ளரிக்காய்தான். 100 கிராம் வெள்ளரிக்காயில் 18 கிராம் கலோரிதான் கிடைக்கும். வெள்ளரிக்காய் குளிர்ச்சியானது. அப்படியே உண்ணத் தூண்டும் சுவை உடையது.

நன்கு ஜீரணம் ஆகக்கூடியது. சாதாரணமாக வெள்ளிக்காயைப் பச்சையாகக் கடித்துச் சாப்பிடுவது வழக்கம். ஆனால், இதை மிக்ஸியில் அரைத்துச் சாறாக்கியும் அருந்தலாம். இளநீரைப் போன்று ஆரோக்கிய ரசமாக வெள்ளரிச் சாறு திகழ்கிறது.

தயிரில் வெள்ளரிக்காய்த் துண்டுகளை நறுக்கிப் போடவும். அத்துடன் கேரட், பீட்ரூட், தக்காளி, முள்ளங்கி ஆகியவற்றைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிச் சேர்த்துக்கொள்ளவும். இந்தக் காயில் உள்ள சுண்ணாம்புச் சத்து ரத்தக்குழாய் இறக்கத்தைத் தளர்த்தி உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. மலச்சிக்கலுக்குச் சிலர் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவார்கள். அதற்குப் பதிலாகத் தினசரி இரண்டு வெள்ளரிக்காய்களைச் சாப்பிட்டால் மலச்சிக்கலின்றிக் குடல் எப்போதும் சுத்தமாக இருக்கும்.

உங்கள் எலும்பு, முடி மற்றும் சருமத்தை வலுவாக வைத்திருப்பதிலும் தாக்கம் செலுத்துகின்றன.

வெள்ளரிகளில் அதிக நீர்ச்சத்து உள்ளது மற்றும் வைட்டமின் சி மற்றும் கே ஆகியவை உள்ளது. இதில் எடை இழப்புக்கு உதவும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நீங்கள் கூடுதல் கிலோவைக் குறைக்க , உங்கள் தினசரி உணவில் வெள்ளரிக்காயை  சேர்க்க வேண்டும் .

இரத்த உறைவு, எலும்பு வளர்சிதை மாற்றம் மற்றும் இரத்த கல்சியம் அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வெள்ளரிக்காயின் விதைகள் மலச்சிக்கலை எதிர்த்துப் போராட உதவுகின்றன. நீரிழிவு எதிர்ப்பு நன்மைகளைக் கொண்டுள்ளன.

வெள்ளரிக்காய் தோல் மற்றும் நமது கூந்தலுக்கு மிக நல்லது. வெள்ளரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், முடி வளர்ச்சி நன்றாக இருக்கும். மேலும், சருமமும் பளபளப்பாகும். வெள்ளரிக்காய் சாறு குடிப்பதால், சருமத்தில் உள்ள கறைகள் மறைந்துவிடும்.

வெள்ளரிக்காய் எல்லாவகையான சத்துக்களையும் கொண்டுள்ளது. வெள்ளரிக்காயை சமைக்கக் கூடாது ஏனெனில் அதிலுள்ள பொட்டாசியம் பாஸ்பரஸ் ஆகியவை அழிந்துவிடும். பச்சையாக சாப்பிடுவது மிக நல்லது.கீல்வாதத்தை குணப்படுத்தும் பித்தநீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகிறது.

ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த வெள்ளரிக்காயை சாப்பிடுவதால் உடல் உற்சாகமடைந்து சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவுகிறது.

உடலுக்கு அற்புத நன்மைகளை தரும். வாரம் மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிடுங்கள். கண்பார்வை, சருமம் ஆகியவை ஆரோக்கியமாக திகழும். உடல் எடையும் குறையும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News