25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >>


உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகம் உள்ள துவரம் பருப்பு .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகம் உள்ள துவரம் பருப்பு .

உடல் எடை கூட ஒரு சிலர் உடலில் அதிக சதைப்பற்று இல்லாமல் மிகவும் மெலிந்த தேகம் கொண்டிருப்பர். இவர்களின் உடல்வாகு பெருக்க துவரம்பருப்பை பசு வெண்ணெய் விட்டு வதக்கி,அரிசி சாதம் சாப்பிடும் போது இந்த கலவையுடன் பசுவின் நெய்யை கலந்து சாப்பிடுவதால் மெலிந்த தேகம் கொண்டவர்கள் உடலில் சதைபிடிப்பு உண்டாகும். உடலுக்கு வலிமை கிடைக்கும்.

 துவரம் பருப்பில் உள்ள பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. இது இரத்த ஓட்டத்தை சீராக நடைபெறச் செய்கிறது. இதனால் இரத்த அழுத்தம் குறைந்து, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எனவே ரத்த அழுத்த பிரச்சனை தீர அடிக்கடி உணவில் துவரம் பருப்பை சேர்த்து கொள்வது அவசியம்.

உடலில் தசைகளின் வலுவிற்கும் வளர்ச்சிக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து ஆகும். துவரம் பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகம் உள்ளது. புரதமானது செல்கள், திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது. எனவே குழந்தைகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பை கொண்டவர்கள் துவரம் பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும்.

வளரும் நாடுகளில் பிறக்கும் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஒரு குறைபாடாக இரத்த சோகை இருக்கிறது. ரத்தத்தில் ஃபோலேட்டுகளின் குறைபாட்டினால் ரத்த சோகை ஏற்படுகிறது. துவரம் பருப்பில்  ஃபோலேட்டுகள் இருக்கின்றன. எனவே வளரும் நாடுகளில் குழந்தைகளிடம் காணப்படும் அனீமியா எனப்படும் ரத்த சோகைக்கு துவரம் பருப்பு ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது.

துவரையில் உள்ள கனிமச்சத்துக்கள் வீக்கத்தைக் குறைப்பதோடு எதிர்ப்பு அழற்சி தன்மையையும் அதிகம் கொண்டுள்ளன. மேலும் அடிபட்ட இடத்தில் உண்டாகும் வீக்கம் மற்றும் இரத்தகட்டிற்கு துவரம் பருப்பை அரைத்துப் போடுவதால் வீக்கம் விரைவில் குறையும்.

சிறிது துவரம்பருப்பு,உளுந்து, கடலைப்பருப்பு, புளி சிவப்பு மிளகாய், சிறிது தேங்காய் கலந்து வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டு வரஉடலில் இரத்தத்தில் உள்ள கொழுப்பு சத்தை கரைக்கும் சிறுநீர் தொற்றை தடுக்கும் வல்லமை துவரைக்கு உண்டு.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News