25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


இரும்பு சத்து அதிகம் உள்ள அகத்திக்கீரை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இரும்பு சத்து அதிகம் உள்ள அகத்திக்கீரை.

அகத்திக்கீரை கசப்பு சுவையும் ,துவர்ப்பு சுவையும் கொண்டது. இதனை பொறியல் செய்தும், கூட்டு செய்தும் சாப்பிடலாம். இதன் கசப்பு சுவை தெரியாமல் இருக்க துவரம் பருப்பு அல்லது பாசிப் பருப்புடன் தேங்காய் துருவலும் சேர்த்து சமைக்கலாம்.அகத்திக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் ரத்த சோகையை குணமாக்கும். தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

நெஞ்சு சளி, தோல்நோய் போன்றவைகளுக்கு அகத்திக்கீரை நல்ல பலனை தரும். ஒரு டம்ளர் மோரில் ஒரு தேக்கரண்டி அகத்திக்கீரை கலந்து அதிகாலையில் குடித்து வந்தால் பித்தம் குணமாகும்.வாய்ப்புண்ணால் அவதிப்படுபவர்கள் அகத்திக்கீரையுடன் தேங்காய் துருவல் சேர்த்து சாப்பிட்டுவந்தால் வாய்ப்புண் விரைவில் குணமாகும்.

குழந்தை பிறந்ததும் உடல் பருமன் ஆகாமல் இருக்க வாரத்திற்கு இரண்டு வேளை பாலூட்டும் பெண்கள் அகத்திக் கீரையை உணவில் சேர்த்து வந்தால் உடல் பருமன் ஆகாமல் இருக்கும்.அகத்தி கீரையில் சுண்ணாம்பு சத்து அதிகமாக இருப்பதால், அது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் குறைந்தது வாரத்திற்கு ஒருமுறையாவது அகத்தி கீரை எடுத்துக் கொள்வது நல்லது.

அகத்திக் கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டுவர உடல் உஷ்ணம் குறையும். கண்கள் குளிர்ச்சியாகும். நீராடைப்பு, பித்த மயக்கம் குணமாகும். சிறுநீர் தடையில்லாமல் போகும்.அகத்திக்கீரை உடல் சூட்டை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை தரும். பித்தத்தை குறைக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். கண் நோய்கள் வராமல் பாதுகாக்கும். உடலில் உள்ள விஷங்களை முறியடிக்கும் சக்தியும் இதற்கு உண்டு.

அகத்திக்கீரையை வெயிலில் காய வைத்து பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் நெஞ்சுவலி குணமாகும்.அகத்திக்கீரையுடன் தேங்காய்த்துருவல் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். அகத்திக்கீரையை அரைத்து புண்கள் மீது தடவினால் அவை விரைவில் ஆறும்.
சித்த மருந்துகள் எடுத்துகொள்ளும் போது அகத்திகீரை சாப்பிடக் கூடாது. பொதுவாக அகத்தி கீரையை அடிக்கடி சாப்பிடக் கூடாது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News