25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


அலாஸ்கா பகுதி காடுகளில் வாழும் தனித்துவ பறவையினம் கறுப்பு மரங்கொத்தி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அலாஸ்கா பகுதி காடுகளில் வாழும் தனித்துவ பறவையினம் கறுப்பு மரங்கொத்தி.

 உடல் கறுப்பு நிறமாக இருக்கும் மரங்கொத்தி வடஅமெரிக்கா மற்றும் அலாஸ்கா பகுதி காடுகளில் வாழும் தனித்துவமானது. ஆண் பறவை தலை மஞ்சள் வண்ணப் பட்டையுடன் ஜொலிக்கும். மரங்களில் வாழும் புழு, பூச்சிகளை உணவாகக்கொள்ளும்.

 கறுப்பு மரங்கொத்தி, எரிந்த நிலையில் இருக்கும் காட்டுப்பகுதியில் அதிகமாக பறந்து திரியும். தீயில் கருகும் மரங்களில்இருந்து தப்ப முயலும், பூச்சிகளை பிடித்து உண்ணும். மற்ற மரங்களில் கூர்ந்த அலகால் பட்டையை உரித்து, நீண்ட நாக்கால் பூச்சிகளை வெளியே இழுத்து உண்ணும். இந்த பறவை மரத்தில் துளையிடும் ஒலி, வெகு தொலைவு வரை கேட்கும்.

இதன் இனப்பெருக்கம் மே முதல்ஜூலை வரை நடக்கிறது. ஆண், பெண் பறவைகள் இணைந்து மரக்கிளையில் கூடு கட்ட குழி தோண்டும். பெண் பறவை, இரண்டு முதல் ஆறு முட்டைகள் வரை இடும். இரு பாலினமும்  மாறி மாறி அடைகாக்கும். முட்டைகள் பொரிந்து, நான்கு வாரங்களில்குஞ்சுகள் பறக்க துவங்கும்.

இயற்கையை சமநிலையில் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த பறவை. புழு, பூச்சிகளை கட்டுப்படுத்துவதால், காடு ஆரோக்கியமாக வளர உதவுகிறது. இந்த பறவையின எண்ணிக்கை குறைந்துள்ளதால், பாதுகாக்கப்பட வேண்டிய உயிரின பட்டியலில் வைத்துள்ளது சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம். இதன் தனித்துவ வாழ்க்கை முறையும், எரியும் காடுகளுடனான தொடர்பும், இயற்கை ஆர்வலர்களை கவர்ந்துள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News