நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை .
தொடர் மழை காரணமாக ராஜபாளையம் சுற்று பகுதியில் ,நிரம்பிய குளங்கள், கண்மாய்களில் குளிப்பதற்கு ,பள்ளி கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு இன்றி மூழ்கி பலியாகும் நிலை உள்ளது.
குடி மராமத்து என்ற பெயரில் ஆங்காங்கு தோண்டப்பட்டும், சட்ட விரோதமாக மணல் திருடப்பட்டும் பள்ளங்கள் பாசனத்திற்கு உள்ள கண்மாய்களில் பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளது
ஆர்வம் உள்ள சிறுவர்கள். மாணவர்கள்விடுமுறை நாட்களில் பெற்றோர் துணையின்றி குளிப்பதற்கு சென்று நீர் நிலைகளில் ஆழம் தெரியாமல் மூழ்குவதால், உயிர் பலி விபத்துக்கள் ஏற்படுகிறது.
நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை, நீர் நிலைகளை சுற்றி தடுப்பு வேலி அமைத்தும், கண் காணிப்புகேமரா பொருத்தியும் தடுப்பதன் மூலம் தேவையற்ற இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க,மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
0
Leave a Reply