நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர்.
கார்த்திகை இரண்டாவது தினத்தை முன்னிட்டு வழிபாட்டிற்காக பக்தர்கள் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் உள்ள அய்யனார் கோயில் ஆற்றில் குவிந்தனர். இங்குள்ள ஆசிரமத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்றபின் ஆற்றில் நீர்வரத்து குறைந்த நேரத்தில் மறுபுறம் உள்ள அய்யனார் கோயிலுக்கு சென்றனர். நீர்வரத்து அதிகரித்ததால், பாதுகாப்பு கருதி பக்தர்களுக்கு, மதியத்துக்கு மேல் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர்.
0
Leave a Reply