அவல் ஊத்தப்பம்.
தேவையான பொருட்கள்-
1/2 கப் அவல்,1/4 கப் ரவை,1/4 கப் புளிப்பில்லாத கெட்டி தயிர்,
2 டேபிள்ஸ்பூன் துருவிய கேரட்,2 டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,
சிறிதளவுபொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை,
தேவையானஅளவு உப்பு,தேவையான அளவு தண்ணீர்
செய்முறை -
முதலில் அவலை கழுவி பத்து நிமிடம் ஊற வைக்கவும்.பின் ஊற வைத்த அவலை நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.
பின் இதனுடன் ரவை, தயிர் தேவையான அளவு , சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதிகமாக தண்ணீர் சேர்க்க கூடாது. பின்னர் ஊத்தப்பம் சரியாக வராது. அடை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
கேரட் ,வெங்காயம் , கொத்தமல்லி தழை மூன்றையும் சிறிது உப்பு சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும். அடுப்பை பற்றி வைத்து தோசை கல் சூடானதும் ஒரு கரண்டி மாவை ஊற்றவும். பின் மேலாக கேரட் வெங்காய கலவையை பரவலாக தூவி எண்ணெய் சேர்த்து இரு புறமும் வேகவைத்து எடுக்கவும். அவல் ஊத்தப்பம் தயார்.
0
Leave a Reply