"தயவுசெய்து லோன் வாங்கி கார் வாங்காதீங்க!" – நடிகர் அப்புக்குட்டி உருக்கம்.
கண்ணன் சாவித்திரி தயாரித்து இயக்கியுள்ள"பண்டமாற்று" திரைப்படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் அப்புக்குட்டி, தன் சொந்த வாழ்க்கைப் பாடத்திலிருந்து ஒரு முக்கிய எச்சரிக்கையைப் பகிர்ந்து கொண்டார்.
விழாவில் அவர் பேசியதாவது:
"இந்தப் படத்தின் கதை வட்டிக்குக் கடன் வாங்குவது, காரை அடமானம் வைப்பது மற்றும் அதனால் ஏற்படும் சிக்கல்களைப் பற்றியது. நானும் என் காரை அடமானம் வைத்து பல சிரமங்களை அனுபவித்துள்ளேன். திரையுலகில் 10 சதவீத நடிகர்கள் மட்டுமே வசதியாக வாழ்கிறார்கள்; எல்லாரும் வசதியானவர்கள் அல்ல.
என் சொந்த அனுபவத்தில் சொல்கிறேன்... தயவுசெய்து லோன் போட்டு கார் வாங்காதீர்கள். நமக்கு ஒரு மாதம் வருமானம் வந்தால் பல மாதங்கள் வருமானம் வராது. அப்புறம் தவணை கட்ட முடியாமல் மாட்டிக்கொள்வீர்கள்." — நடிகர் அப்புக்குட்டி.
0
Leave a Reply