இராஜபாளையம் இராஜூக்கள் கல்லூரி பொன்விழா ஆண்டு நிகழ்வையொட்டி அறிவியல் கட்டிடத் திறப்பு விழா
இராஜபாளையம் இராஜூக்கள் கல்லூரி பொன்விழா ஆண்டு நிகழ்வையொட்டி அறிவியல் கட்டிடத் திறப்பு விழா கல்லூரியில் வைத்து நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நாகலாந்து ஆளுநர் மேதகு இல.கணேசன் அவர்கள் கலந்து கொண்டு 2.5 கோடி மதிப்புள்ள புதிய அறிவியல் கட்டிடத்தைத் திறந்து வைத்தார். திறப்பு விழா நிகழ்வில் கல்லூரித் தலைவர் திரு.கே.ஜி.பிரகாஷ் அவர்கள் விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். கல்லூரிச் செயலர் முனைவர்.எஸ்.சிங்கராஜ் அவர்கள் கல்லூரியின் 51 ஆண்டு கால சாதனைகளை விளக்கிப் பேசினார். பழைய பாளையம் ராஜூக்கள் மகுமைப் பண்டு தலைவர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.ராம்கோ நிறுவன மேலாண்மை இயக்குனர் திருமதி நிர்மலா வெங்கட்ராம ராஜா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
கல்லூரியின் புதிய அறிவியல் கட்டிடம் நிதி உதவி வழங்கிய கொடையாளர்களை நாகலாந்து ஆளுநர் மேதகு இல. கணேசன் அவர்கள் பாராட்டு தெரிவித்து கௌரவித்தார். அவர் தனது சிறப்புரையில்,இராஜபாளையம் ராஜூக்களின் வழி சமுதாய மரபுகள், கட்டுப்பாட்டுகள் ஆகியவை தனித்துவம் வாய்ந்தவை. ஏழை, எளிய மாணவர்களுக்கான இலவச கல்வி சேவையை கல்லூரி வழங்கி வருகிறது., இராஜபாளையத்தின் மண்ணின் மாண்பில் கல்லூரி வளர்ந்த விதம், மாணவர்களின் கல்வி வளர்ச்சியில், எதிர்கால இந்தியாவை உருவாக்கும் மாணவர்களின் மன உறுதியை நினைவு கூர்ந்தார். சுதந்திர இந்தியா கடந்து வந்த பாதை மற்றும் இளைய பாரதத்தை உருவாக்க வேண்டும் என்றும் நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட வேலு நாச்சியார் , கட்டபொம்மன், ஜான்சிராணி, பாரதியார், வ.உ. சி. போன்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எடுத்துக் கூறி பூரண சுதந்திரம் பெற்றுத் தேசத்தை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்லும் மாணவர்களை உருவாக்க வேண்டும் என்றும் தேசிய ஒருமைப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறினார்.
விழாவின் நிறைவாகக் கல்லூரியின் முதல்வர் முனைவர். கே.ரமேஷ் குமார் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். விழாவிற்கு சிவகாசி துணை ஆட்சியர் திருமதி பிரியா அவர்கள், கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள், பழைய பாளையம் மகுமைப் பண்டு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், அலுவலர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply