சப்பாத்தி மாவு பிசையும்போது....
மீதமான பூரி அல்லது சப்பாத்தி மாவை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது மாவின் மேல் எண்ணெய் தடவி, காற்று புகாமல் மூடி வைத்தால் மாவு கலர் மாறாமல் அப்படியே இருக்கும்.
சப்பாத்தி சாஃப்ட் ஆகா வருவதற்கு மாவு பிசையும் போது சிறிது பால் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக வரும்.
சப்பாத்தி மாவுடன் சிறிதளவு சமையல் சோடாவை சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.
சப்பாத்தியை சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் எப்போதும் சூடாக இருக்கும்.
பூரி, சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, வெந்நீர் ஊற்றி ஒரே ஒரு சொட்டு சோடா உப்பை கலந்து பிசைந்தால் பூரி பெரிதாகவும், நன்கு உப்பியும் வரும்.
0
Leave a Reply