மீண்டும் இணையும் சசிகுமார் – சமுத்திரக்கனி.
நண்பர்களான சசிகுமாரும், சமுத்திரக்கனியும் பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற சைமா விருது விழாவில் இருவருக்கும் விருதுகள் கிடைத்தன.
இந்த நிகழ்வில், இருவரும் இணையும் புதிய படத்தையும் அறிவித்துள்ளனர். ‘ஸ்கூல் பஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சமுத்திரக்கனி இயக்குகிறார். சசிகுமார், கிச்சா சுதீப், மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகிறது. பள்ளிப் பருவத்தில் நண்பர்களாக இருந்தவர்கள், அதன்பிறகு வாழ்க்கையில் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை மையமாகக் கொண்டு கதை உருவாகிறது.
0
Leave a Reply