25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


திராட்சை விதை மருத்துவ குணங்கள் நிறைந்தது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திராட்சை விதை மருத்துவ குணங்கள் நிறைந்தது.

உலக அளவில் புற்றுநோய் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் திராட்சை விதையை மூலப்பொருளாக கொண்டு புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தும் மருந்துகளை தயாரிக்கின்றன. திராட்சை விதைகளில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்து காணப்படுகின்றன. இதில் அதிக அளவில் ஆக்சிஜனேற்ற பண்புகள் காணப்படுவதால், அவை உடலில் ஏற்படும் அழுத்தத்தை எதிர்த்து போராடி வீக்கத்தைக் குறைக்கின்றன. உடலின் செல்களை பாதுகாக்கும் சில கூறுகள் திராட்சை விதையில் இருப்பதால், இது இதயம் மற்றும் மூளை பகுதியில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

திராட்சை விதைகள் காயங்களை ஆற்றும் கொலாஜன்கள் என்ற வலைப்பின்னல் உடலில் உருவாக உதவுகிறது. இதன் மூலம் உட லில் ஏற்படும் காயங்கள் விரைவில் குணமாகும் மற்றும் தோலின் அழகு அதிகரிக்கும். சில இயற்கை சேர்மங்களை கொண்டிருப்ப தால் முடி உதிர்தல் தடுக்கப்பட்டு, அடர்த்தியாக முடி வளர உதவு கிறது. திராட்சை விதையில் இருந்து பெறப்படும் சாறு மூளை செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வயதான காலத்தில் ஏற்படும் மூளை நரம்பு சிதைவு மற்றும் நினைவுத்திறன் இழப்பை கட்டுப்படுத்த திராட்சை விதையை மென்று உண்பது பலன் தரும் என்று கூறப்படுகிறது.

மனித உடல் எப்போதும் உடலில் நுழையும் நுண்ணுயிர்களுக்கு எதிராக போராடி உடலைப் பாதுகாக்கும் நுட்பமான வேலையை தொடர்ந்து செய்கிறது. திராட்சை விதை சாறு உடலில் நுழையும் பல்வேறு பாக்டீரியாக்கள், பூஞ்சைகளின் வளர்ச்சியை தடுக்கும் ஆற்றலை கொண்டுள்ளது என்றும், தொடர்ந்து திராட்சை விதை களை உணவாக உட்கொள்ளும் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்றும்ஆய்வுகள் தெரிவிக்கின்றன.விதையில்லாத பழங்களை விட விதையுள்ள பழங்கள் அரிய பல ஆற்றல் கூறுகளை கொண்டவை என்பதற்கு திராட்சை விதை ஒரு உதாரணம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News