. பறக்கும் கேமரா ஸ்மார்ட்போன்
உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களையும் வியப்படைய செய்துள்ளது விவோ பிராண்ட். பறக்கும் கேமரா ஸ்மார்ட்போன் பல காலமாக ,சிறப்பான கேமரா (camera) அம்சங்களை உலகிற்கு அறிமுகம் செய்த விவோ நிறுவனம், இப்போது யாரும் எதிர்பார்த்திடாத வகையில், புதிதாக பறக்கும் கேமராவை ஸ்மார்ட்போனுடன் இணைத்துள்ளது.விவோ(Vivo) நிறுவனம் விரைவில் பறக்கும் கேமரா அம்சம் கொண்ட ஒரு புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை உலகிற்கு அறிமுகம் செய்யவுள்ளது.சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படங்களில் வருவது போன்ற ஹைடெக்கான அமைப்பை இந்த பறக்கும் கேமரா ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இந்த பறக்கும் கேமரா ஸ்மார்ட்போன் இரண்டு பகுதிகளாக பிரியக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.விவோ டிசைன் செய்துள்ள இந்த புதிய பறக்கும் கேமரா ஸ்மார்ட்போன் சாதனம் பார்ப்பதற்கு வழக்கமான ஸ்மார்ட்போன் போல காட்சியளிக்கிறது. இந்த போனிற்குள் நிறுவனம் ஒரு மினி ட்ரோன் கருவியை இன்பில்ட்டாக(miniinbuiltdrone) மறைத்து வைத்துள்ளது. இந்த ட்ரோனில்200MP திறன் வரை வழங்கக்கூடிய ஒரு மைக்ரோ கேமராவை விவோ உருவாக்கியுள்ளது. இந்த போனின் பின்புறத்தில் வழக்கமான ட்ரிபிள் கேமரா அம்சமும் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
ஏரியல் வியூ வீடியோ மற்றும் புகைப்படங்களை படம்பிடிக்க இந்த் போனுடன் வரும் குவாட்க்காப்டர் ட்ரோனை(quadcopter) நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். ட்ரோன் புகைப்படம் மற்றும் வீடியோ(dronephotographyandvideorecording) பதிவு கலாச்சாரம் இப்போது உலகம் முழுக்க பேமஸ் அடைந்து வரும் ஒரு முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது..இதை புரிந்துகொண்ட விவோ நிறுவனம் அதன் ஸ்மார்ட்போனில் பறக்கும் கேமராவை வழங்க ஒரு மினி டிரோன் கருவியை போனுக்குள் மறைத்து வைத்து உருவாக்கியுள்ளது. இந்த வடிவமைப்பிற்கான டிசைனை விவோ நிறுவனம்2020 ஆம் ஆண்டு சமர்ப்பித்து உரிமையை வாங்கி கொண்டது. நான்கு வருட நீண்ட போராட்டத்திற்கு பிறகு, வெற்றிகரமாக போனில் இருந்து பிரிந்து செயல்படும் ஒரு பறக்கும் கேமராவை விவோ இப்போது உருவாக்கியுள்ளது.
,எந்த நிறுவனத்தாலும் இத்தகைய வெற்றிகரமான ப்ரோட்டோடைப் சாதனத்தை உருவாக்க முடியவில்லை என்பதே உண்மையாகும். உலகமே திரும்பி பார்க்கும் வகையில் விவோ நிறுவனம் மட்டும் இதை சாத்தியமாக்கியுள்ளது.போனில் இருந்து பிரிந்து பறக்கும் ட்ரோனை கட்டுப்படுத்த ஸ்மார்ட்போனிலேயே கண்ட்ரோலராக (controller) பயன்படுத்தும் அமைப்பையும் நிறுவனம் உருவாக்கியுள்ளதாக தெரிகிறது. பறக்கும் பொழுது பொருள் அல்லது மனிதர்கள் மீது மோதாமல் இருக்க ஆட்டோமேட்டிக் டிடெக்ஷன் அம்சமும் இதில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மினி டிரோன் எவ்வளவு நேர பயன்பாட்டை வழங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், இது திறம்பட செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்த விவோ பறக்கும் கேமரா ஸ்மார்ட்போன் சாதனம்$1000 டாலருக்கு மேல் விலை பெரும் என்று கூறப்பட்டுள்ளது. இத்தகைய புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க வண்டுமென்றால், கட்டாயம் விலை அதிகமாக தான் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இன்னும் பல கட்ட சோதனைகளுக்கு பிறகு 2027ல் வெளிவரலாம் என்று கூறப்பட்டுள்ளது.
0
Leave a Reply