நீளமான கால்வாய்
உலகின் நீளமான விவசாய நீர்பாசன கால்வாய் துர்க்மெனிஸ்தானில் உள்ளது. இதன் பெயர் கார்கும் கால்வாய். இதன் கட்டுமானப்பணி1954ல் தொடங்கி1988ல் நிறைவடைந்தது. இதன் நீளம்1375 கி.மீ. இது ஆண்டுக்கு13 கன கி.மீ., தண்ணீரை அமு தர்யா ஆற்றில் இருந்து காராகும் பாலைவனத்துக்கு கொண்டு செல்கிறது. இக்கால்வாய் நீரை பயன்படுத்தி பருத்தி விவசாயம் நடக்கிறது. துர்க்மெனிஸ்தானின் விவசாய உற்பத்திக்கு இக்கால்வாய் முக்கிய பங்காற்றுகிறது. தலைநகர் அசுகாபத்துக்கு தண்ணீர் வழங்கும் முக்கிய கால்வாய் இதுதான்.
0
Leave a Reply