விளையாட்டுப் பருவமான வெறும் 16 வயதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனத்தை தொடங்கி, தற்போது ரூ.100 கோடியாக மாற்றியுள்ளார் பிரஞ்சலி அவஸ்தி என்ற சிறுமி.
அமெரிக்காவின் புளோரிடாவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் பிரஞ்சலி அவஸ்தி. இவரது தந்தைக்கு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் கல்வியை மேம்படுத்தும் பணி என்பதால், அதில் பிரஞ்சலி அவஸ்திக்கும் சிறு வயது முதலே அதிகளவு ஆர்வம் இருந்துள்ளது.இதனால்,தனது7வது வயதிலேயே கோடிங் எழுதுவதை கற்றுக் கொண்ட பிரஞ்சலி அவஸ்தி, தனது13வது வயதில் புளோரிடா இன்டர்நேஷனல் யுனிவர்சிட்டியின் ஆராய்ச்சி ஆய்வகத்தில் இன்டர்ன்ஷிப் காலத்தில் விர்சுவல் முறையில் கற்கத் தொடங்கினார்.
இந்த நேரத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் உலகம் முழுவதும் வந்ததால், மெஷின் லேர்னிங் என்ற புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் கற்கத் தொடங்கினார். இதே நேரத்தில்OpenAI நிறுவனம்ChatGPT பீட்டா வெர்ஷனை வெளியிட்டதால், அதை பயன்படுத்தி ஆராய்ச்சித் தரவுகளை பிரித்தெடுத்தல் உள்ளிட்ட பணிகளை செய்யத் தொடங்கினார் பிரஞ்சலி அவஸ்தி.பின்னர்,Delv.AI என்ற நிறுவனத்தை உருவாக்கி, டேட்டா தொடர்பான பல்வேறு பணிகளை செய்யத் தொடங்கினார். இதன் மூலம் On Deck மற்றும் Village Global ஆகிய நிறுவனங்களிடம் இருந்து பிரஞ்சலி அவஸ்தியின் நிறுவனத்திற்கு ரூ.100 கோடி அளவிற்கு முதலீடு கிடைத்தது.
இதன்மூலம்16 வயதில் நிறுவனத்தின் மதிப்பை ரூ.100 கோடியாக மாற்றி, அமெரிக்க வாழ் இந்தியர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அத்துறையில், தொழில்துறையில் சாதிக்க விரும்புவோருக்கும் புதிய ஊக்கத்தை கொடுத்துள்ளார் பிரஞ்சலி அவஸ்தி
0
Leave a Reply