25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


சினிமாவை விட்டு ஒதுங்கினாலும் நடிகர் விஜயகுமார் மஞ்சுளா தம்பதியின் 2வது மகள்ப்ரீத்தா மாதத்திற்கு லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சினிமாவை விட்டு ஒதுங்கினாலும் நடிகர் விஜயகுமார் மஞ்சுளா தம்பதியின் 2வது மகள்ப்ரீத்தா மாதத்திற்கு லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்

சினிமாவை விட்டு ஒதுங்கினாலும் நடிகர் விஜயகுமார் மஞ்சுளா தம்பதியின் 2வது மகள்ப்ரீத்தா மாதத்திற்கு லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்ப்ரீத்தா பிசினஸில் படு பிசியாக இருந்து வருகிறார்.இவர்1998ம் ஆண்டு சந்திப்போமா என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.தெலுங்கு, மலையாள படங்களில் அவர் நடித்தாலும், தமிழில் படையப்பா படத்தில் ரஜினியின் மகளாக நடித்ததன் மூலம் பிரபலமானார். இதை தொடர்ந்து சுயம்வரம், அல்லி அர்ஜுனா, புன்னகை தேசம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தொடர்ந்து2002ம் ஆண்டு இயக்குனர் ஹரியை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு3 மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு படத்தில் நடிப்பதை நிறுத்திய ப்ரீத்தா சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். சினிமாவை விட்டு ஒதுங்கினாலும் ப்ரீத்தா பிசினஸில் படு பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உத்தண்டி என்னும் இடத்தில் ப்ரீத்தா பேலஸ் என்ற மண்டபம் இருக்கிறது. இந்த மண்டபத்தில் ஒரே நேரத்தில் 300 முதல் 500 பேர் பங்கேற்க முடியும். இந்த கல்யாண மண்டபம் இருக்கும் பகுதிக்கு அருகிலேயே மெட்ராஸ் காபி ஹவுஸ் என்ற சிற்றுண்டி உணவகத்தையும் ப்ரீத்தா தொடங்கினார். இந்த உணவகத்தில் வேலை செய்யும் அனைவரும் பெண்கள் என்பது கூடுதல் சிறப்பு. ஈசிஆர் நெடுஞ்சாலையில் இருப்பதால் இந்த உணவகம் ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே பிசினஸ் பிக்அப் ஆகிவிட்டது.இவை தவிர எடிட்டிங், டப்பிங் ஸ்டுடியோ ஒன்றையும் ப்ரீத்தா நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு சென்னை சாலிகிராமத்தில் குட்லக் என்ற பெயரில் இந்த ஸ்டுடியோ இயங்கி வருகிறதுஇந்த ஸ்டூடியோவை நடிகர் சூர்யா திறந்து வைத்தார். இப்படி கல்யாண மண்டபம், உணவகம், டப்பிங் ஸ்டுடியோ என ப்ரீத்தா மாதத்திற்கு லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News