அதானியின் உலகிலேயே மிகப்பெரிய காப்பர் ஆலை
அதானி குழுமம் பல்வேறு துறைகளில் தொழில் செய்து வருகிறது. இந்த நிலையில், குஜராத் மாநிலம் முந்த்ராவில் அதானி என்டர்பிரைசஸ் (Adani Enterprises) நிறுவனத்தின் கீழ் கட்ச் காப்பர் (Kutch Copper) நிறுவனத்தின் மிகப்பெரிய காப்பர் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே, ஒரே இடத்தில் அமைந்திருக்கும் மிகப்பெரிய காப்பர் ஆலை இதுதான்.
இந்த நிலையில், அதானியின் கட்ச் காப்பர் ஆலை வரும் மார்ச் மாத இறுதிக்குள் முதற்கட்ட உற்பத்தியை தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலையின் உற்பத்தித் திறன் 2029-ம் நிதியாண்டுக்குள் 10 லட்சம் டன்னாக உயரும் எனக் கூறப்படுகிறது. ஆலையின் மொத்த மதிப்பு சுமார் 1.2 பில்லியன் டாலர்.
இந்தியா அதிக அளவில் காப்பர் இறக்குமதி செய்து வருகிறது. இந்த நிலையில் அதானியின் காப்பர் ஆலையால், இந்தியாவின் இறக்குமதி சார்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0
Leave a Reply