ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: தொடக்கப் போட்டியிலேயே வங்கதேசத்தை 13-0 என்ற கோல் கணக்கில் வென்றதது இந்தியா.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியின் 9-வது சீசன் நேற்று பஞ்சாப்பில் தொடங்கியது. நடப்பு சாம்பியன் இந்தியாவுடன் சீனா, வங்கதேசம், ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய 6 அணிகள் இதில் பங்கேற்கின்றன. லீக் சுற்று முடிவில் 'டாப்-4' இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற தனது முதல் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்திலேயே இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் முதல் கோலை அடித்து கணக்கைத் தொடங்கினார்.
முதல் பாதியிலேயே இந்தியா 6-0 என முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது பாதியிலும் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்தது. முடிவில், இந்திய அணி 13-0 என்ற கோல் கணக்கில் பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்தது.
0
Leave a Reply