பெண்களுக்கான ஆசிய யூத் கபடி: பைனலில் இந்திய பெண்கள் அணி முதலிடம் பிடித்து பைனலுக்கு முன்னேறியது.
ஆசிய யூத் விளையாட்டு பஹ்ரைனின் மனாமா நகரில் ,பெண்களுக்கான கபடியில்இந்திய அணி, முதல் மூன்று போட்டியில் வங்க தேசம், இலங்கை, தாய்லாந்தை வீழ்த்தியது. நான்காவது போட்டியில் இந்திய பெண்கள் அணி, ஈரானை எதிர்கொண்டது. இதில் இந்தியா 59-26 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று பட்டியலில்முதலிடம்பிடித்துபைனலுக்குமுன்னேறியது..இன்று, இரண்டாவுது இடம் பெற்ற ஈரானை எதிர் கொள்கிறது.
இந்திய அணி தனது நான்காவது போட்டியில் ஆண்களுக்கான கபடியில் ,ஈரானை எதிர் கொண்டது. இந்தியா, 46–29 என்ற புள்ளிக் கணக்கில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றது. தொடர்ந்து நான்கு வெற்றி பெற்ற இந்திய அணி, பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்று தனது ஐந்தாவது போட்டியில் தாய்லாந்தை சந்திக்க உள்ளது.இந்திய அணி இதுவரை ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என 3 பதக்கம் வென்று, பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது
0
Leave a Reply