வரையாடுகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
இராஜபாளையம்ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் WWF அமைப்பிலிருந்து T.S.சுப்பிரமணியன்அவர்கள்வரையாடுகள்பற்றியவிழிப்புணர்வுநிகழ்ச்சியை பள்ளிமாணவர்களுக்காக நடத்தியது. பள்ளி தாளாளர் திருமதிஆனந்தி அவர்கள் நிகழ்ச்சியை தலைமைதாங்க, பள்ளிமுதல்வர் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி, விருந்தினரை வரவேற்றார். வரையாடுகள் உலகில் மூன்று இடங்களில்மட்டுமே காணப்படுபவை.அவற்றின் உயிரியல் வகைப்பாடு, அதன் வாழ்வியல் முறைகள் , தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகளுக்கு இப்போது உள்ள குறைபாடுகள்மற்றும் அவற்றின் மீதான தன் சொந்தஅனுபவத்தையும் பள்ளி மாணவர்களுக்கு PPT மூலம்காணொளி மூலம் விளக்கினார். T.S. சுப்பிரமணியன்அவர்கள் கேள்வி, பதில்கள் தொடர்புமூலம் காடுகளை காப்பதன் அவசியத்தைமிக நுட்பமாக எடுத்துரைத்தார். 4000 அடி உயரத்திற்கு மேலேயுள்ளமலை முடிகளில் மட்டும் வாழும் பண்புடையவரையாடுகளின் இலக்கியக்குறிப்புகள் உடல் அமைப்பு, வியத்திவரலாறு மற்றும் இனப்பெருக்கம், சூழலியல்காணப்படும் இடங்கள், மற்றும் பலமேற்கோள்கள், புகைப்படங்கள் மூலம் விளக்கப்பட்டது. இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, மான், வரையாடு, புலி, சிங்கவால் குரங்கு, கரடி, காட்டெருமை, சாம்பல்நிற அணில்கள், போன்றவற்றின் வாழ்விடம் ஆகும். மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதியை சார்ந்து வாழும்நமக்கு, இவ் விழிப்புணர்வு நிகழ்ச்சிவாழ்வின் மிக முக்கிய பங்கைஅளிக்கிறது. அரசு மற்றும் WWF அமைப்பிற்கும்,பள்ளி சார்பாக நன்றியை தெரிவிக்ககடமைப் பட்டிருக்கிறோம். நாளைய தலைமுறையான மாணவக்கண்மணிகள் வியப்புடன் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டார்கள். ஆசிரியை திருமதி அழகுராணிநன்றி நவில விழா இனிதேநிறைவு பெற்றது.
0
Leave a Reply