ரத்தசோகையை விரட்டியடிக்கும்பீட்ரூட் ஜூஸ்
தேவையான பொருட்கள்- பீட்ரூட் 1 (தோலை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவேண்டும். பீட்ரூட்டில் செலினியம், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர், சோடியம், வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் உள்ளது. பீட்ரூடை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அது சருமத்துக்கு பொலிவைத்தரும். வெயிலால் ஏற்படும் கருமையைப் போக்கும். குடலில் உள்ள நச்சுக்களை கரைத்து வெளியேற்றும்) இஞ்சி – சிறிய துண்டு (பச்சை வாசத்தை போக்கி, சுவையைத்தரும்) எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்
(இனிப்புக்கு வெல்லம் தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம் அல்லது நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் கூட சேர்த்துக்கொள்ளலாம். பீட்ரூட்டே இனிப்பு சுவையானதுதான். எனவே இது தேவையில்லை. ஆனால் அதன் பச்சை சுவை விரும்பாதவர்கள் இதை சேர்த்துக்கொள்ளலாம்.
செய்முறை - அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். இதை அப்படியே பருகவேண்டும். தேவைப்பட்டால் ஜஸ் க்யூப்கள் சேர்த்து பருகலாம். எப்போது வேண்டுமானாலும் பருகலாம்.
சாறு வடித்தபின் மிஞ்சும் சக்கையை உங்கள் முகம் உடலில் சருமத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்துகொள்வதால் சருமம் பொலிவு பெறுகிறது. அதை ஜஸ் ட்ரேயில் சேர்த்து ஐஸ் கட்டிகளாகவும் மாற்றிக்கொள்ளலாம். அதையும் வைத்து மசாஜ் செய்யலாம்.
வயோதிகத்தால் ஏற்படும் பார்வை குறைபாடு மற்றும் ஞாபக மறதி ஆகியவற்றைப்போக்கும். சருமம் பொலிவு பெறும். செரிமானக் கோளாறுகள், அல்சர் மற்றும் வயிறு தொடர்பான அத்தனை பிரச்னைகளுக்கும் தீர்வாகும். உடலில் உள்ள நச்சுக்களை அடித்து வெளியேற்றும்.
0
Leave a Reply