கருப்பு நிற பால் கொடுக்கும் விலங்கு ஆப்ரிக்க கருப்பு காண்டாமிருகம்
மனிதர்களின் வாழ்க்கையில் பால் முக்கிய பங்கு வகிக்கிறது. பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை பாலை தங்களது அன்றாட வாழ்வில் உட்கொள்கின்றனர். ஏனென்றால் ஊட்டச்சத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் பால் மிகவும் அவசியம்.மனிதர்கள் குழந்தையாக இருக்கும்போது தாய் பால் கொடுக்கப்படுகிறது. அவர்கள் சற்று வளர்ந்ததும் ஆடு அல்லது மாட்டு பால் கொடுக்கப்படுகிறது. மனிதர்கள் மட்டுமன்றி ஆடு, மாடு, ஒட்டகம், சிங்கம், புலி என பெரும்பாலான மிருகங்கள் பாலூட்டிகளாக உள்ளன.
உலகில் சுமார்6,400 பாலூட்டிகள் உள்ளதாக கூறப்படுகிறது. சிறப்பு என்னவென்றால் இந்த6,400 பாலூட்டிகளில் ஒரு விலங்கு மட்டும் கருப்பு நிற பாலை தரும். உண்மையாகவே ஒரு பாலூட்டி கருப்பு நிறத்தில் பால் தருகிறது.கருப்பு நிறத்தில் பால் தரும் விலங்கு கருப்பு காண்டாமிருகம் தான். இவை ஆப்ரிக்க கருப்பு காண்டாமிருகம் என அழைக்கப்படுகின்றன. இந்த வகை காண்டாமிருகங்களின் பாலில்0.2 சதவீதம் மட்டுமே கொழுப்பு உள்ளது. தண்ணீர் போல இருக்கும் காண்டாமிருகத்தின் பால் கருப்பு நிறத்தில் இருக்கும்.கருப்பு காண்டாமிருகங்களால்4 முதல்5 வயது வரைமட்டுமே இனப்பெருக்கம் செய்ய முடியும்.அவை ஒரு வருடத்திற்கும் மேலாக கர்ப்பமாக இருக்கும். இவை ஒருமுறை ஒரு குட்டியை மட்டுமே ஈனும்.
0
Leave a Reply