25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


Amazon Pay ஆப்பில் கடன் வாங்கும் வசதி! UPI சேவையே மாற போகுது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

Amazon Pay ஆப்பில் கடன் வாங்கும் வசதி! UPI சேவையே மாற போகுது

.. ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸின் சமீபத்திய அறிக்கையின்படி, அமேசான் பே இந்தியாவின் முழுநேர இயக்குனரான விகாஸ் பன்சால் (Vikas Bansal) இது குறித்து பேசுகையில், யுபிஐ மீதான கிரெடிட் என்பது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கும். இந்த முயற்சிக்காக நாங்கள் என்பிசிஐ (National Payments Corporation of India) உடன் கூட்டு சேர்ந்துள்ளோம் என்று கூறியுள்ளார். யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் மூலம் கிரெடிட் ஆப்ஷன்களை (Credit Options).. அதாவது கடன் கொடுக்கும் விருப்பங்களை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.ஏற்கனவே அமேசான் நிறுவனமானது அதன் அமேசான் பே லேட்டர் (Amazon Pay Later) வழியாக உடனடி கிரெடிட்டை (Instant Credit) வழங்குகிறது என்பதும்,. இந்த அம்சம் வாடிக்கையாளர்களுக்கு அமேசானில் பொருட்களை வாங்கவும், மாதாந்திர தவணைகளில் பணம் செலுத்தவும் உதவுகிறது. இந்த பை நௌவ் பே லேட்டர் (Buy Now Pay Later) சேவையை வழங்க அமேசான் ஃபைனான்ஸ் இந்தியாவானது ஆக்ஸியோ (Axio), ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் பேங்க் (IDFC FIRST Bank) வங்கி மற்றும் கரூர் வைஸ்யா வங்கி (Karur Vysya Bank) ஆகியவைகளுடன் கூட்டுவைத்துள்ளது. அமேசான் பே லேட்டர் ஆனது 9 மில்லியன் வாடிக்கையாளர் பதிவுகளை ஈர்த்துள்ளது. இது 99.9% கட்டண வெற்றி விகிதத்தை (Payment success rate) கொண்டுள்ளது.


பரிமாற்ற கட்டண கட்டமைப்பை (Interchange fee structure) சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை மற்றும் சிறிய வணிகர்களிடையேயான குறைந்த தத்தெடுப்பு (Low adoption) காரணமாக யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான கிரெடிட் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அமேசானின் வணிகர்களின் விரிவான வலையமைப்பானது இந்த நிலைமையை மாற்றும் என்று விகாஸ் பன்சால் நம்புகிறார்
மேலும் அவர், 100 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் (ஷாப்பிங் செய்வது, பில் கட்டணங்களை செலுத்துவது, வணிகர்களிடம் இருந்து ஆன்லைன் வழியாக பொருட்களை வாங்குவது மற்றும் பிறருக்கு பணம் அனுப்புவது உட்பட) பல்வேறு பரிவர்த்தனைகளுக்கு அமேசான் பே யுபிஐ-ஐ பயன்படுத்துகின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளார்.

அமேசான் பே சேவையானது 350-க்கும் மேற்பட்ட நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் 8.5 மில்லியனுக்கும் அதிகமான ப்ரிக் மற்றும் மோட்டார் விற்பனையாளர்களை (Brick-and-mortar sellers) சேர்த்துள்ளது. மேலும், டாக்ஸி முன்பதிவு, உணவு விநியோகம், திரைப்படம் மற்றும் பேருந்து டிக்கெட் மற்றும் பயண முன்பதிவு போன்ற பல்வேறு சேவைகளை வழங்கும் 10,000 ஆன்லைன் விற்பனையாளர்களால் இது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அமேசான் பேவை தழுவிய முக்கிய பிராண்டுகளில் உபர் (Uber), ஜோமாட்டோ (Zomato), ஸ்விக்கி (Swiggy), டாமினோஸ் (Dominos) மற்றும் புக்மைஷோ (BookMyShow) ஆகியவைகளும் அடங்கும். மேலும் அமேசான் பே ஆப் ஆனது ஆர்பிஎல் வங்கி (RBL Bank) உடன் இணைந்து யுபிஐ கட்டணங்களையும் செயல்படுத்துகிறது. மேலும் ஃபாஸ்ட்டாக் (FASTag) ரீசார்ஜ்களுக்காக ஐசிஐசிஐ பேங்க் (ICICI Bank) உடன் கூட்டுசேர்ந்துள்ளது. இதுதவிர்த்து அமேசான் பே ஐசிஐசிஐ இணை பிராண்டட் கிரெடிட் கார்டையும் அறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த பிப்ரவரியில், அமேசான் பேவானது ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கியிடம் (Reserve Bank of India) இருந்து ப்ரீபெய்ட் பேமண்ட் இன்ஸ்ட்ரூமென்ட் லைசன்ஸையும் (Prepaid payment instrument license) பெற்றுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News