கார்பந்தயம், டென்னிஸ், கால்பந்து, கோல்ப்விளையாட்டு போட்டிகள்.
கார்பந்தயம்- மெக்சிகோ 'கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா-1' பந்தயத்தில் 'பெராரி' அணியின் ஸ்பெயின் வீரர் கார்லஸ் சைன்ஸ் (ஒரு மணி நேரம், 40 நிமிடம் 55,800 வினாடி) சாம்பியன் ஆனார்.
டென்னிஸ்-ஏ.டி.பி., டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் இந்தியாவின் சுமித் நாகல் 84வது இடத்துக்கு தள்ளப்பட்டார். முதலிரண்டு இடத்தில் சின்னர் (இத்தாலி), அல்காரஸ் (ஸ்பெயின்) உள்ளனர்.
கால்பந்து -இந்திய பெண்கள் லீக் கால்பந்து 7வது சீசன் அடுத்த ஆண்டு ஜன. 10 - ஏப். 13ல் நடக்கிறது. முதல் நாளில் ஒடிசா - ஈஸ்ட் பெங்கால், கோகுலம் கேரளா-ஸ்ரீபூமி அணிகள் மோதுகின்றன.
கோல்ப் -தென் கொரியாவில் நடந்த சர்வதேச கோல்ப் தொடரில் இந்தியாவின் சுபாங்கர், 66வது இடம் பெற்றார். தென் கொரியாவின் பியோங் ஹன் ஆன் கோப்பை கைப்பற்றினார்.
0
Leave a Reply