முன் மாதிரியான சேவை விருதிற்கு குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் .
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இளைஞர் நீதிச்சட்டம் (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள்) 2015-ன்கீழ் குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்கள் பதிவு பெற்று செயல்படும் இல்லங்களுக்கு, குழந்தைகளின் நலனை பேணிக்காப்பதில் திறம்பட செயல்பட்டு வரும் நிறுவனங்கள்/இல்லங்களை அங்கீகரிப்பதற்காகவும், ஊக்குவிப்பதற்காகவும் ஆண்டு தோறும் “முன் மாதிரியான சேவை விருது“- வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, அரசு குழந்தைகள் இல்லங்களுக்கு பரிசுத் தொகையாக ரூ.1,00,000/-ம்,தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கீழ் செயல்படும் குழந்தைகள் இல்லங்களுக்கு பரிசுத் தொகையாக ரூ.1,00,000/-ம், சட்டத்திற்கு முரணாக செயல்பட்டதாக கருதப்படும் குழந்தைகளுக்கான இல்லங்களுக்கு பரிசுத் தொகையாக ரூ.1,00,000/-ம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுகளுக்கு பரிசுத் தொகையாக ரூ.1,00,000/-ம், என ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
சிறப்பாக பணியாற்றிய ஒரு குழந்தைகள் பராமரிப்பு நிறுவனத்தினை தேர்வு செய்து மாநில அளவிலான ஆய்வுக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்படும். மாநில அளவிலான தேர்வுக்குழுவினரால் சிறந்த அரசு குழந்தைகள் இல்லங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கீழ் செயல்படும் குழந்தைகள் இல்லங்கள், சட்டத்திற்கு முரணாக செயல்பட்டதாக கருதப்படும் குழந்தைகளுக்கான இல்லங்கள் என மூன்று வகையில் சிறந்த இல்லங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.
இவ்விருதிற்கு விண்ணப்பிப்பதற்கு இளைஞர் நீதிச்சட்டம் (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள்) 2015-ன்கீழ் குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்கள் பதிவு செய்திருக்க வேண்டும். தொடர்ந்து ஐந்து வருட காலம் செயல்பாட்டில் இயங்கி இருக்க வேண்டும். குழந்தை பராமரிப்பு நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மீதும் எந்தவொரு உரிமையியல் மற்றும் குற்றவியல் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கக்கூடாது.
விருதுநகர் மாவட்டத்தில் “முன் மாதிரியான சேவை விருது”–க்கு மேற்குறிப்பிட்ட தகுதிகளின் அடிப்படையில் உரிய சான்றுகளின் ஒளிநகல்களுடன் ”மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண். 503, 5-வது தளம், புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர் - 626002 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 22.10.2026 அன்று மாலை 5.30 மணிக்குள் சேரும் வகையில் அனுப்படவேண்டும். மேற்குறிப்பிட்ட தேதிக்கு பின்வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply