25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


கோவை டாக்டர். அசோக் பக்தவத்சலம் ஒரு மென்பொருள் ஆலோசகராக பணியை தொடங்கி இன்று கோவையின் தவிர்க்க முடியாத நபர்களுள் ஒருவர்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோவை டாக்டர். அசோக் பக்தவத்சலம் ஒரு மென்பொருள் ஆலோசகராக பணியை தொடங்கி இன்று கோவையின் தவிர்க்க முடியாத நபர்களுள் ஒருவர்

கோயம்புத்தூர் மாவட்டத்கை தொழில்நுட்ப மையமாக மாற்றிய பெருமைக்குரிய டாக்டர். அசோக் பக்தவத்சலம் ஒரு மென்பொருள் ஆலோசகராக பணியை தொடங்கி இன்று கோவையின் தவிர்க்க முடியாத நபர்களுள் ஒருவராக உருவெடுத்துள்ளார்.1990 களில் KGiSL நிறுவனத்தை தொடங்கி, மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷனில் கவனம் செலுத்தினார். பின்னர் புகழ்பெற்ற கேஜி மருத்துவமனையுடன் இணைந்து மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் பணிகளை மேற்கொண்டார்.இதனை அடுத்து 1996 இல், கோயம்புத்தூரில் முதல் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் நிறுவனமாக KGiSL மாறியது. டாக்டர். பக்தவத்சலத்தின் தலைமையில் நிறுவனம் விரிவடைந்து, IT மற்றும் BPO சேவைகளிலும் கால் பதித்தது. குறுகிய காலத்தில் அதிக வளர்ச்சி: குறுகிய காலத்திலேயே KGiSL உற்பத்தி, வங்கி, சுகாதாரம், காப்பீடு, நிதி மற்றும் கணக்கியல் உள்ளிட்ட பல்வேறு வகையான தொழில்களுக்கு சேவை செய்யும் நம்பகமான மென்பொருள் சேவை நிறுவனமாக உருவானது

.KGiSL இன் பிரதான தயாரிப்பான டால்பின், பேக் எண்ட் ஆஃபிஸ் சேவை மற்றும் மூலதனச் சந்தைகளில் தீர்வு நடவடிக்கைகளுக்காக இந்தியாவில் உள்ள 60% க்கும் அதிகமான நிறுவன தரகர்களால் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி KGiSL நிறுவனத்துக்கு தற்போது, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் அலுவலகங்கள் உள்ளன. ஆசியாவிலேயே UiPath இன் முதல் டயமண்ட் பார்ட்னர் என்ற பெருமையை இந்நிறுவனம் பெற்றுள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலம்: மேலும், டாக்டர் பக்தவத்சலத்தின் தொலைநோக்குப் பார்வையால் கோவையில் CHIL சிறப்புப் பொருளாதார மண்டலம் நிறுவப்பட்டு KGiSL SEZ என அழைக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையை மையமாக கொண்ட இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் டெல் இன்டர்நேஷனல், காக்னிசன்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன

கல்வி நிறுவனங்கள் அமைப்பு: தொழில் மட்டுமின்றி, எதிர்கால திறமைகளை வளர்ப்பதிலும் கால் பதித்த இவர், கோவை சரவணம்பட்டியில் KGiSL இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கேஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஜிஐஎஸ்எல் - இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் மேனேஜ்மென்ட் ஆகிய கல்வி நிறுவனங்களை நிறுவினார். அதுமட்டுமின்றி மைக்ரோ காலேஜ் என்ற புது முறையில் பட்டதாரிகளுக்கு கிளவுட் கம்ப்யூட்டிங், ஃபுல் ஸ்டேக் டெவலப்மென்ட், சைபர் செக்யூரிட்டி மற்றும் பிற வளர்ந்து வரும் துறைகளிலும் திறன்களை கற்று தருகிறது. தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஒரு புறம் இருந்தால், மக்கள் நலனுக்கான செயல்களிலும் ஈடுபடுகிறார்.கே.ஜி மருத்துவமனையின் அறங்காவலராக , பின்தங்கிய நபர்களுக்கு 1,00,000 இலவச IOL அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள உதவி செய்தார். இவரது சாதனைகளை பாராட்டி,ஜி.கே.சுந்தரம் ஈட்டி விருது, டாக்டர்.எஸ்சி (ஹானரிஸ் காசா) மற்றும் லயன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் வழங்கும் தகவல் தொழில்நுட்பத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது என விருதுகளை குவித்துள்ளார்.கோவையில் மேலும் ஒரு ஐடி சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்க இருப்பதாக அறிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பத்தில் R&Dயை வளர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ள இந்த பொருளாதார மண்டலத்திற்காக 1,000 கோடி முதலீடு செய்வதாகவும் அறிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News