கிரிக்கெட் பெண்கள் ஐ.சி.சி., சார்பில் ஒரு நாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது.
சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான ஐ.சி.சி., சார்பில் ஒரு நாள் போட்டியில் தரவரிசை பட்டியல் வெளியானது. பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, 728 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்து 2வது இடத்திற்கு தள்ளப் பட்டார்.இங்கிலாந்தின் நாட் சிவர் பிரன்ட், 731 புள்ளியுடன் மீண்டும் ‘நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார். இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 10வது இடம் பிடித்தார். மற்ற இந்திய வீராங்கனைகள் ரிச்சா 39வது, ஹர்லீன் 48வது இடத்துக்கு முன்னேறினர்.பவுலர் வரிசையில் இந்தியாவின் தீப்தி, நான்காவது இடத்தில் தொடர்கிறார்.
0
Leave a Reply