தும்பைப் பூ
பூச்சிக்கடிக்கு மருந்தாகும் தும்பைப்பூ மழைக்காலத்தில் செழித்து வளரக்கூடிய தும்பைப்பூ தலை நோய்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடியது. சளி, ஜலதோஷம் இருப்பவர்கள் தும்பைப்பூவை நல்லெண்ணெயில் காய்ச்சி அதன் எண்ணெயை தலையில் தேய்த்து குளித்தால் பிரச்சினை சரியாகும்.இதேபோல் தலைவலி, தலைபாரம் உள்ளவர்கள் தும்பைப்பூவை பசும்பால் விட்டு அரைத்து நெற்றியில் பூசினால் நிவாரணம் கிடைக்கும்.சொறிசிரங்கு உள்ளவர்கள் தேவையான அளவு தும்பைப்பூவையும், தும்பை இலையையும் மையாக அரைத்து உடம்பில் பூசி ஒரு மணிநேரம் கழித்து சுட்ட சீயக்காயுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து தேய்த்து குளித்து வந்தால் பிரச்சினை தீரும்.
0
Leave a Reply