இங்கிலாந்து மகாராணி எலிசெபத் மறைவு
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் காலமானார். பால்மோரல் அரண்மனையில் மகாராணியின் உயிர் பிரிந்ததாக பங்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது இவருக்கு தற்போது 96 வயதாகிறது. ஸ்காட்லாந்து நாட்டில் தற்போது ஓய்வு எடுத்து வரும் இங்கிலாந்து மகாராணி எலிசெபத்தை, இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ் நேற்று நேரில் சந்தித்தார் மறைந்த மன்னர் பிலிப்பின் மனைவியான ராணி எலிசெபத் 1926ம் ஆண்டு ஏப்ரல் 21- ந் தேதி லண்டனில் பிறந்தவர்..1952ம் ஆண்டு மன்னர்6ம் ஜார்ஜ் மறைவுக்கு பிறகு அரியணை ஏறினார். அப்போது அவருக்கு வயது 25..தனது 21 வயதில் கிறீஸ் இளவரசர் பிலிப்பை அவர் மணந்து கொண்டார்.
கடந்த 2021ம் ஆண்டு இளவரசர் பிலிப் மரணமடைந்தார். இளவரசரின் மரணம் ராணியை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கியது
.1952ம் ஆண்டு மன்னர்6ம் ஜார்ஜ் மறைந்த பின் அரசு பதவிக்கு வந்தவர் எலிசபெத். எலிசபெத் பிரிட்டனை நீண்டகாலம் ஆண்ட இரண்டாவது மகாராணி என்ற பெருமைக்குரியவர்.
வயது மூப்பு மற்றும் உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சமீபகாலமாக ராணி எலிசெபத் தன்னுடைய அரச கடமைகளை பெரும்பாலும் தனது வாரிசுகளிடம் ஒப்படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0
Leave a Reply