சுகர் பேஷண்ட்ஸ் உணவு முறை
சர்க்கரை நோயாளியின் ரத்த சர்க்கரை அளவு இரவில் குறைவாக இருக்கும். அதிகாலை3 முதல்4 மணி வரை குறைந்த அளவில் இருக்கும். இதனால் தூங்காவிட்டாலும் கூட, எதையும் சாப்பிடாவிட்டாலும் அவர்கள் ரத்த சர்க்கரை அளவு காலையில் அதிகரிக்கும். இதை நாம் டான் பினாமினா என்று அழைக்கிறோம். கார்டிசோல், அட்ரினலின், நார் அட்ரினலின் உள்ளிட்ட ஹார்மோன்கள் இந்த உயர்வுக்கு காரணமாக உள்ளது.இரவு நேரத்தில் எல்லா செயல்பாடுகளும் குறைவாக இருப்பதாலும், ஹார்மோன்கள் அதிகம் வேலை செய்யாமல் இருப்பதால் ரத்த சர்க்கரை குறைவாக உள்ளது.இருக்கும் எல்லா ஹார்மோன்களிலும், இன்சுலின்தான் ரத்த சர்க்கரையை குறைக்கிறது. இதனால்தான் காலை உணவிற்கு பிறகு ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இதனால்தான் நாம் சாப்பிடும் காலை உணவு நமது ரத்த சர்க்கரையை அதிகரிக்காமல் பார்த்துகொள்வது முக்கியம்.
அதிக நார்சத்து உள்ள உணவுகள், மற்றும் குறைந்த கிளைசிமிக் இண்டக்ஸ் கொண்ட உணவுகள். முழுதானிய வகைகளில் எடுத்துகொள்ளும் பிரட் மற்றும் சீரியல்களை நாம் சாப்பிடலாம். தாவரம் அல்லது விலங்குகளின் புரத சத்தை நாம் எடுத்துகொண்டால் அடிக்கடி பசிக்காது.ஒரு முழு முட்டையை நாம் காலை உணவாக எடுத்துகொள்ள முடியும். ஆனால் ஒரு முட்டையின் மஞ்சள் கரு300 மில்லி கிராம் கொலஸ்டாலை கொண்டது. இந்நிலையில் நாம் முட்டையின் வெள்ளை கருவை வைத்து ஆம்லேட் செய்தால்,3 முதல்4 வரை முட்டைகளை பயன்படுத்தலாம். சுத்தமாக கார்போஹைட்ரேட், கொழுப்பு சத்து இல்லாத புரத சத்தை நாம் தேர்வு செய்ய வேண்டும்.
குறிப்பாக பீன்ஸ், நட்ஸ், மீன்கள். ஒரு கப் பாலில், அதில் பூசணி விதைகள், சியா விதைகள், பிளக்ஸ் விதைகளை சேர்த்து குடிக்கலாம். பழங்களில் குறைந்த கிளைசிமிக் கொண்ட பழங்களான ஆப்பிள், கொய்யா, பப்பாளி, ஆரஞ்சு ஆகியவற்றை பழங்களாக எடுத்துகொள்ளவும். ஜூஸ் வடிவில் எடுத்துகொள்ள வேண்டாம்.காலை உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி, போகா எடுத்துகொள்ளலாம். ஆனால் அதன் அளவு குறைவாக இருக்க வேண்டும். முளைகட்டிய பயிர்களுடன் இதை நாம் சாப்பிட வேண்டும். காலையில் எடுத்துகொள்ளும் காப்பியில் நாம் அதிகம் பால் சேர்க்காமல் இருக்க வேண்டும்.இந்தியர்கள் உணவு முறையில் அதிகபடியாக கார்போஹைட்ரேட்தான் உள்ளது. இந்த கார்போஹைட்ரேட்ஸ் உங்கள் ரத்த குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறது.
0
Leave a Reply