முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி மெட்காலா நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அணிந்திருந்த ஆடை
அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.உலகிலேயே மிகப்பெரிய பேஷன் நிகழ்வாக கருதப்படுகிறது மெட்காலா.இதில் உலகெங்கிலும் இருக்கக்கூடிய பல்வேறு பிரபலங்கள் புது விதமான ஆடைகளை அணிந்து வந்து கலக்குவார்கள். அந்த வகையில் நடப்பு ஆண்டு நிகழ்ச்சியின் கருப்பொருளாக வைக்கப்பட்டது "ஸ்லீப்பிங் பியூட்டி அவேக்கனின் ஃபேஷன்" என்பதாகும்.இந்த நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி கலந்து கொண்டார். அப்போது அவர் அணிந்திருந்த அந்த ஃப்ளோரல் கவுன் பலரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த கவுனை வடிவமைத்தவர் ராகுல் மிஸ்ரா ஆவார். இதனை வடிவமைக்க அவரும் அவரது உதவியாளர்களும் 10,000 மணி நேரங்களை எடுத்துக் கொண்டார்களாம். ஃப்ளோரல் புடவையை அடிப்படையாகக் கொண்ட இந்த கவுன் , இந்தியாவின் பல்வேறு கிராமங்களில் கைப்பட எம்ப்ராய்டரி செய்யப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து தான் அது அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியில் உள்ள மெட்ரோபாலிடியன் மியூசியத்தை சென்றடைந்ததாம்.
இங்கு தான் மெட் காலா நிகழ்ச்சி கோலாகலமாகவும் வண்ணமயமாகவும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஈஷா அம்பானி அணிந்திருந்த ஆடையின் கருப்பொருள் "தி கார்டன் ஆஃப் டைம்" என்பதாகும். பலவகையான மலர்கள் பட்டாம்பூச்சிகள் மற்றும் டிராகன் ஈக்கள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய வகையில் இந்த ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது.ஃபரீசா (Fareesha), ஜர்தோசி( Zardozi), நாக்சி (Nakshi) , டப்கா( Dabka) மற்றும் (French knots)பிரெஞ்சு நாட்ஸ் ஆகிய வகைகளைக் கொண்டு எம்ப்ராய்டரி இந்த ஆடை வடிவமைப்பில் பின்பற்றப்பட்டுள்ளதாக வடிவமைப்பாளர் அனைதா ஷெராஃப் தெரிவித்துள்ளார்.உள்ளூர் மக்களின் பங்களிப்பையும் ஊக்குவிக்கும் விதமாக ராகுல் மிஸ்ரா இந்தியாவின் பல்வேறு கிராமங்களுக்கு அனுப்பி பாரம்பரிய முறையில் இந்த எம்பிராய்டரி வேலைகளை செய்ததாக தெரிய வந்துள்ளது. நமது பூமி தற்போது உள்ள சூழலில் இருந்து மீண்டு திரும்ப எழுந்து வரும் என்பதை வலியுறுத்தும் வகையிலும், பூமியின் நீடித்த தன்மையை வெளிப்படுத்தும் வகையிலும் இந்த ஆடையினை ஈஷா அம்பானி தேர்வு செய்ததாக அவர் கூறியுள்ளார். இத்துடன் ஈஷா அம்பானி ஒரு பர்சையும் வைத்திருந்தார். இதுவும் பாரம்பரிய முறையில் இந்திய கிராமங்களில் தயாரிக்கப்பட்டதாம்.
0
Leave a Reply