கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் உலர்ந்த பழங்கள்
உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதை தினமும் சாப்பிடுவதால் நம் கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
வால்நட் தினமும் வால்நட் சாப்பிடுவதால் உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைகிறது. உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படுகிறது. இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகளவு இருப்பதால், உங்கள் இதயத்திற்கு சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது
பெக்கன் கொட்டைகள் : இதில் நம் உடலுக்கு ஆரோகியத்தை தரும் கொழுப்புச் சத்துகளும் ஆண்டி ஆக்சிடெண்டும் அதிகளவு உள்ளது. இவை இதய நோய்களிலிருந்து நம்மை காக்கிறது. உடல் எடை குறைக்க விரும்புவர்கள் இதை அடிக்கடி தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பாதாம் நார்ச்சத்து, மாக்னீசியம், விட்டமின் ஈ போன்ற பல சத்துகள் பாதாம் பருப்பில் உள்ளது. நமது கொலஸ்ட்ரால் அலவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது பாதாம். மேலும், நமது ரத்த ஓட்ட்த்தில் விட்டமின் ஈ-யை அதிகப்படுத்தில், ‘கெட்ட’ கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. ஆகவே தினமும் குறைந்தது 5 பாதாம் பருப்பு சாப்பிட்டால் உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
பிஸ்தா நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள், நார்ச்சத்து, ஆண்டி ஆக்சிடெண்ட் ஆகியவை பிஸ்தாவில் அதிகளவு உள்ளது. இதிலிருக்கும் பொட்டாசியம், நம் உடலில் உள்ள சோடியம் அளவை குறைக்க உதவுகிறது. முக்கியமாக, தினமும் பிஸ்தாவை சாப்பிடும் போது நம் உடலில் ‘கெட்ட’ கொலஸ்ட்ராலின் அளவு குறைகிறது.
பேரிட்சை பழம் நம் உடலுக்கு உடனடி ஆற்றலை கொடுப்பது பேரிட்சை பழம். இதில் அதிகமாக இரும்புச்சத்து உள்ளது. மேலும், இதை தினமும் சாப்பிடுவதால் ‘கெட்ட’ கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க உதவுகிறது.
வேர்க்கடலை இதற்கு முன்பு சொல்லப்பட்ட உலர்ந்த பழங்களை எல்லாம் தினமும் சாப்பிட வேண்டுமென்றால் கொஞ்சம் கூடுதல் செலவாகும். ஆனால் வேர்க்கடலை அப்படியல்ல. விலை மலிவானது மட்டுமல்ல; நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்துக்கொள்ளவும் இவை பெரிதும் உதவுகிறது.
ஹேசல் நட்ஸ் இதில் ஆண்டி ஆக்சிடெண்டும் நம் உடலுக்கு அரோக்கியத்தை தரக்கூடிய கொழுப்புகளும் அதிகளவில் உள்ளது. இதை தினமும் சாப்பிடுவதால் உங்கள் உடலில் உள்ள ‘கெட்ட’ கொலஸ்ட்ராலின் அளவு குறைவதோடு நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகளும் கிடைக்கிறது. ஹேசல் நட் சாப்பிடுவது நம் இதயத்திற்கும் நல்லது.
பிரேசில் நட்ஸ் நம் இதய நலனில் முக்கிய பங்கு வகிக்கும் மினரலான செலினியம் பிரேசில் நட்ஸில் அதிகளவு உள்ளது. மேலும், இவை நம் உடலில் உள்ள ‘கெட்ட’ கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் உதவுகிறது.
மக்காடமியா நட்ஸ் நம் உடலில் நிறைவுறா கொழுப்பை அதிகப்படுத்தி, கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது மக்காடமியா நட்ஸ். இதை உங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம், ‘கெட்ட’ கொலஸ்ட்ராலை குறைத்து ஆரோக்கியமாக வாழலாம்.
0
Leave a Reply