பழைய சோற்றை சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி தரும்.
சாதத்தில் தண்ணீர் ஊற்றி மறுநாள் காலையில் பழைய சோற்றை சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி, வலிமை தருவதுடன் வயிற்றுக்கோளாறு அலசர். மூட்டு வலி, தோல் நோய்கள் ஆகியவை பாதிக்காமல் பாதுகாக்கிறது.
பழைய சோற்றில் தயிர் ஊற்றி சாப்பிடக்கூடாது. மோரைக் கடைந்து ஊற்றி சாப்பிட வேண்டும்.
சாதம் வெதுவெதுப்பாக இருக்கையில் பசும்பால் ஊற்றி சாப்பிட்டால் தண்ணீர்த் தாகம் ஏற்படுவதும், பித்தம் உண்டாவதும் நீங்கும்.
பச்சரிசி சோற்றில் பால் சேர்த்துச் சாப்பிட வாதம், பித்தம் நீங்கும்.
மோர் சாதம் செரிமானக் கோளாறுகளை நீக்கி, வாதம், பித்ததை தணிக்கிறது.
சாம்பார் சோறு வயிற்று பொருமலுக்கு மிகவும் நல்லது.
0
Leave a Reply