மகசூலை அதிகரிக்கும் உரங்கள்
டி.ஏ.பி.உர பயண்பாட்டினை குறைத்து அதே அளவுஊட்டச்சத்தை சூப்பர் பாஸ்பேட்மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்.சூப்பர் பாஸ்பேட் - 50 கிலோ டி.ஏ.பி. உரத்தில்.9 கிலோ தழைச்சத்து மற்றும் 23 கிலோ மணிச்சத்து உள்ளது.இதே அளவு சத்தை கீழ்க்கண்ட மூன்று வழி களில் ஏதேனும் ஒரு வழியினை பயன்படுத்தி பெறலாம் என மத்திய அரசு அறிவுரை வழங்கி யுள்ளது.
3 மூடை (150 கிலோ) சூப்பர் பாஸ்பேட் மற்றும் 20 கிலோ யூரியா அல்லது 1 மூடை (50 கிலோ) 20-20-0-13 காம்ப்ளக்ஸ் மற்றும் 75 கிலோ சூப்பர் பாஸ்பேட் அல்லது 1 மூடை (50 கிலோ) 16: 20: 0: 13 காம்ப்ளக்ஸ் மற்றும் 75 கிலோ சூப்பர் பாஸ்பேட்பயன்படுத்தலாம்.
காம்ப்ளக்ஸ் உரம்-காம்ப்ளக்ஸ் உரங்கள் பயன்படுத்துவதன் மூலம் 13 சதவீதம் கந்தக சத்தும், சூப்பர் பாஸ்பேட் உரத்தில் 12 சதவீதம் கந்தக சத் தும் கிடைக்க செய்வதால் பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரித்து டி.ஏ.பி. உர மிட்ட வயலை போன்றே மகசூல் அதிகம் பெற்று பயன் பெறலாம்.
0
Leave a Reply