'பிரீஸ்டைல்' செஸ் கிராண்ட்ஸ் லாம் தொடர் செஸ்: விதித் முதலிடம் பிடித்தார்
சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் 'பிரீஸ்டைல்' செஸ் கிராண்ட்ஸ் லாம் தொடர் முடிவில் அதிக புள்ளி பெற்ற வீரர் சாம்பியன் ஆவார். இதன் இரண்டாவது தொடர் ஏப்.7-14ல் பாரிசில் நடக்க உள்ளது. இதன் 'ரவுண்டு -16' போட்டியில் இந்தியா வின் விதித் குஜ்ராத்தி, முன்னாள் உலக சாம்பியன் சீனாவின் டிங் லிரென் மோதினர். இதில் விதித் 1.5-05 என வென்றார். காலிறுதியில் இந்தியாவின் பிரனவ், அரையிறுதியில் ஈரானின் அமினை வீழ்த்தினார். பைனலில் விதித், ஹங் கேரியின் ரிச்சர்டு ராப்போர்ட் மோதினர்.இதில் 1.5-05 என்ற கணக்கில் விதித் பெற்று முதலிடம் பிடித்தார். இவருக்கு ரூ.8.7 லட்சம் பரிசு கிடைத்தது.
0
Leave a Reply