விளையாட்டு போட்டிகள் MARCH 27TH
கூடைப்பந்து
கூடைப்பந்து(3×3) தொடர்சிங்கப்பூரில், ஆசிய கோப்பை ஆண்களுக்கான 'பி'பிரிவு தகுதிச்சுற்று முதல் போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின.இதில் இந்திய அணி 21,11என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா அணிக்கு ஹர்ஷ் தாகர்(12 புள்ளி), குஷால் சிங் (5), அரவிந்த் முத்து (2), பிரனவ் பிரின்ஸ் (2) கை கொடுத்தனர்.
இரண்டாவது போட்டியில் இந்தியா, மக்காவ் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய இந்தியா 21-6 என வெற்றி பெற்றது. இந்திய அணிக்க ஹர்ஷ் தாகர் (12 புள்ளி), அரவிந்த் முத்து (5), குஷால் சிங் (2), பிரனவ் பிரின்ஸ் (2) கைகொடுத்தனர்.
இன்று நடக்கும் 3வது போட்டியில் இந்தியா, பிலிப்பைன்ஸ் அணிகள் மோதுகின்றன.
டேபிள் டென்னிஸ்
டேபிள் டென்னிஸ் தொடர் சென்னையில், 'டபிள்யு. டி.டி., கன்டென்டர்' ஸ்டார் ஆண்கள் ஒற்றையர் தகுதிச் சுற்றின் 3வது போட்டியில் இந்தியாவின் அனிர்பன் கோஷ், இத்தாலியின் கார்லோ ரோஸி மோதினர். அனிர்பன் 3-0 (14-12, 11-7, 12-10) கணக்கில் வெற்றி பெற்று, ஒற்றையர் பிரிவு பிரதான சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் திவ்யான்ஷ் ஸ்ரீ வாஸ்தவா 3-1 (11-6, 11-6, 6-11, 11-6) என சகவீரர் முதித் டேனியை வென்றார்.
பெண்கள் ஒற்றையர் தகுதிச் சுற்றின் 3வது போட்டியில் இந்தியாவின் காவ்யா பாட் 3-2 (11-5, 11-6, 4-11, 12-14, 11-7) என சகவீராங்கனை மானு ஸ்ரீ பாட்டீலை தோற்கடித்தார் .
மற்ற போட்டிகளில் இந்தியாவின் கரிமா கோயல், அவானி திரிபாதி, அஞ்சலி ரோஹில்லா, அனன்யா சாந்தே, திவ்யான்ஷி போவ்மிக் வெற்றி பெற்று பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
மல்யுத்தம்
ஜோர்டானில் ஆசிய 'சீனியர்' மல்யுத்த சாம்பியன்ஷிப் இந்தியா சார்பில் கிரிகோ ரோமன் (10), 'பிரீஸ் டைல்' பிரிவில் 20 (10 ஆண் +10 பெண்) என மொத்தம் 30 பேர் பங் கேற்கின்றனர்.
கிரிகோ ரோமன் பிரிவில் போட்டிகள் நடந்தன. ஆண்களுக் கான 87 கிலோ பிரிவு அரையிறுதியில் தோற்ற இந்தியாவின் சுனில் குமார், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் சீனாவின் ஜியாசின் ஹுவாங்கை சந்தித்தார். இதில் சுனில் குமார், 5-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலம் கைப்பற்றினார்.
நேற்று நடந்த 97 கிலோ பிரிவு காலிறு தியில் இந்தியாவின் நிதேஷ் சிவாச்,கஜ கஸ்தானின் இலியாஸ் குச்சிகோவை சந்தித்தார். இதில் நிதேஷ் 9-0 என வெற்றி பெற்று, அரையி றுதிக்கு முன்னேறினார்.இதில் ஈரானின் சராவியிடம் தோல்வியடைந்தார். அடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் விளையாட உள்ளார்.
0
Leave a Reply