சரும சுருக்கம் கருமை நீங்க
ஒரு தக்காளியை நன்கு புழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். பின்னர் இதனுடன் ஒருஸ்பூன் அரிசி மாவு மற்றும் ஒருஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு குழைத்துக்கொள்ள, கிடைக்கும் சேர்மத்தை சருமத்திற்கு பயன்படுத்த சரும சுருக்கங்கள் மறையும்.
ஆரோக்கியமான சருமத்திற்கு உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய மிக முக்கியமான பொருள் கொலாஜன் ஆகும், இது உங்கள் சருமத்தை உறுதியாகவும், சுருக்கங்கள் இல்லாமல் மற்றும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும் புரதமாகும். உடலில் கொலாஜன் அளவைப் பராமரிப்பது மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது இருபது வயதிற்கு பிறகு குறையத் தொடங்கிறது. இதை உங்கள் உணவில் சேர்க்க மாமிசம் சாப்பிடுபவராக இருந்தால் எலும்பு குழம்பும், செயற்கை வழியில் எடுத்துக்கொள்ள கொலாஜன் சப்ளிமெண்டும் சிறந்த வழியாகும். எலும்பு குழம்பில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன, இது தோல் தளர்வை வலுப்படுத்த உதவுகிறது.
தக்காளி சாறுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகம் கழுத்து பகுதிகளில் பூச வேண்டும் 10 நிமிடம் பின் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பொலிவாக இருக்கும் தொடர்ந்து செய்தால் முகம் கருமை நீங்கும்.
0
Leave a Reply