'கோ கோ' உலக கோப்பை இந்திய கேப்டன் பிரதீக் வைக்கார் அறிவிப்பு
இந்தியாவில் முதன் முறையாக கோ கோ உலக கோப்பை தொடர் வரும் 13-19ல் டில்லியில் நடக்க உள்ளது. மொத்தம் 23 நாடுகளில் இருந்து 20 ஆண், 19 பெண்கள் அணிகள் பங்கேற்கின்றன.போட்டிகள் முதலில் 'ரவுண்டு ராபின்' முறையில் நடக்கும். பின் காலிறுதி, அரையிறுதி, ஜன. 19ல் பைனல் நடக்கும்.இந்திய ஆண்கள் அணி தனது முதல் போட்டியில் நேபாளத்தை (ஜன. 13 சந்திக்க உள்ளது. பெண்கள் அணி முதல் போட்டியின் தென் கொரியாவுடன் (ஜன. 14) மோதும்.
ஆண்கள் அணிக்கு பிரதீக் வைக்கார், பெண் கள் அணிக்கு பிரியங்கா இங்லே கேப்டனாக நியமிக்கப்பட்டனர்.
0
Leave a Reply