பெண்களுக்கான கிராண்ட ப்ரி தொடர் சர்வதேச செஸ் கூட்டமைப்பு
பெண்களுக்கான கிராண்ட ப்ரி தொடர் சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே) சார்பில் நடக் கிறது. இதன் 4வது கட்ட போட்டிகள் சைப்ரசில் நடக்கின்றன. இந்தியாவின் ஹரிகா துரோணவள்ளி, திவ்யா உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர்.
இந்தியாவின் திவ்யா, ரஷ்யாவின் அலெக்சாண்ட்ராவைஇதன் மூன்றாவது சுற்றில் சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் விளையா டிய திவ்யா, போட்டியின் 41 வது நகர்த்தல் 'டிரா' செய்தார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஹரிகா, சீனாவின் ஜு ஜினரை எதிர்கொண்டார். கருப்புநிற காய்களுடன் ஹரிகா விளையாடினார். இப் போட்டி 41வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.மூன்று சுற்று முடிவில் சீனாவின் ஜூ ஜினர் (2.5 புள்ளி) உள்ளார். முதலிடத்தில் உக்ரைனின் அனா முஜிசுக் (2.0), கிரீ சின் ஸ்டாவ்ரூலா (2.0) அடுத்த இரண்டு இடங் களில் உள்ளனர். இந் தியாவின் ஹரிகா (1.5) 4. திவ்யா (1.5) 7வது இடங்களில் உள்ளனர்.
0
Leave a Reply