இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க மூலிகை டீ
மருந்து, சரியான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையை மூலம்,சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொள்வது மிகவும் அவசியம்.இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க,உதவும் ஒரு தேநீர் சில வீட்டு வைத்தியங்கள் .
மூலிகைடீ நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். கருப்பு மிளகு, மஞ்சள் மற்றும் இலவங்கப்பட்டை,வெந்தயப் பொடி கலந்து தயாரிக்கப்படுகிறது.கருப்பு மிளகு இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி,ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதையும் தடுத்து,சர்க்கரையின் அளவை சமநிலைப்படுத்தும்..இலவங்கப்பட்டை இன்சுலின் எதிர்ப்பைக் குறைத்து, சாப்பிட்ட பிறகு இரத்த சர்க்கரை கடுமையாக உயருவதைத் தடுத்து,கொலஸ்ட்ரால் அளவை நிர்வகிப்பதற்கும், அதிகப்படியான கொழுப்பைக் குறைப்பதற்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.
முதலில், கருப்பு மிளகை பொடி செய்து 1 ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும்.இதையடுத்து 1 டீஸ்பூன் இலவங்கப்பட்டையை அரை டீஸ்பூன் மிளகு தூள் மற்றும் அரை டீஸ்பூன் வெந்தயப் பொடியை கலக்க வேண்டும்.அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்க்கவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இந்த பொடிகளை சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்னர், வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும். இதை வெறும் வயிற்றில் அல்லது இரவு உணவிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் எடுத்துக் கொள்ளலாம்
0
Leave a Reply