ஹாங்காங் ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறினார் லக்சயா சென்.
ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஹாங்காங்கில் நடைபெற்று வரும் சூப்பர் 500 அந்தஸ்து பெற்ற இத்தொடரின் காலிறுதியில், இந்தியாவின் லக்சயா சென், சிங்கப்பூரின் கீன் யேவ் லோவை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டை 21-17 எனக் கைப்பற்றிய லக்சயா சென், இரண்டாவது செட்டை 10-21 என இழந்தார்.
இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் சிறப்பாக விளையாடிய அவர், 21-13 என வெற்றி பெற்றார்.
55 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் 21-17, 10-21, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற லக்சயா சென், அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.
0
Leave a Reply