காளான் மசாலா தோசை ( Mushroom Masala Dosa).
தேவையான பொருட்கள் –
காளான் - 200 கிராம் (பொடியாக நறுக்கியது ),எண்ணெய் - 2-3 தேக்கரண்டி ,
சீரகம் - 1 தேக்கரண்டி ,பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது).
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது), இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி ,
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி ,
மல்லி தூள் - 1 தேக்கரண்டி, கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி உப்பு – தேவைக்கேற்ப,
கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு (நறுக்கியது).
தோசை மாவு - 2 கப், எண்ணெய் அல்லது நெய் - தோசை சுட தேவையான அளவு .
செய்முறை -
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து, வெங்காயம்பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.நறுக்கி வைத்துள்ள காளான்களைச் சேர்த்து உயர் தீயில் 2-3 நிமிடங்கள் வதக்கவும். காளான்வெந்து சுருண்டு வரும். கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, ஒரு கரண்டி தோசை மாவை ஊற்றி மெல்லிய தோசையாக வட்டமாக தேய்க்கவும்.தோசையின் மேல் மற்றும் சுற்றிலும் சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றவும்.
தோசை ஒருபுறம் வெந்து பொன்னிறமானதும், அதன் நடுவில் நாம் தயாரித்து வைத்துள்ள காளான் மசாலாவை வைக்கவும்.
விரும்பினால் தோசையை மடித்துக் கொள்ளலாம் அல்லது அப்படியே எடுத்து தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் சூடாக பரிமாறவும்.
0
Leave a Reply